கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

Post Views: 53 துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் … Read more

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்…

Post Views: 117 அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, … Read more

உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு எது தெரியுமா? முதல் நாட்டின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்…

Post Views: 63 உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகுக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. அதன்படி கனடாவில் 59.96% படித்தவர்கள். மேலும் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் … Read more

விளையாடும்போதே கால்பந்து வீரரை தாக்கிய மின்னல்.. மைதானத்தில் நடந்த மரணம்.. 

Post Views: 54 இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கிடையே விளையாட்டு வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவில் பாண்டங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே சிலிவங்கி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த சூழலில், திடீரென்று சுபாங் அணியைச் சேர்ந்த செப்டியன் ரகர்ஜா என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அப்போது மைதானத்திலேயே அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இழுபறி… நவாஸ் ஷெரீப் vs இம்ரான் கான்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

Post Views: 163 பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. மொத்தமுள்ள 266 இடங்களில் 250 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 … Read more

மளிகை கடை முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை… ஒரே கட்டிடத்தில் ஒட்டுமொத்த நகரமும் வாழும் அதிசயம்!

Post Views: 321 ஒட்டுமொத்த நகரமும் மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தால் எப்படியிருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆமாங்க, ஒரே சமூகமாக வாழ்தல் என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது விட்டியர் அலாஸ்கா நகரம். இங்குள்ள 14 மாடி பெகிச் டவர் என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான தங்குமிடமாக கருதப்படுகிறது.இங்கு நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கலாம். தபால் நிலையத்திற்குச் செல்லலாம். துணி துவைத்துக் கொண்டே உங்கள் நண்பரோடு உரையாடலாம். ஆனால் … Read more

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

Post Views: 98 கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் … Read more

உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? ஏன்?

Post Views: 58 தெற்கு சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் உலகின் ஏழ்மையான நாடு. தெற்கு சூடானில் 11 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கின்றனர். தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபா. 2011-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. எண்ணெய் வளம் அதிகம் உள்ள போதிலும், தெற்கு சூடான் அதன் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்தவில்லை. புருண்டி: உலகின் இரண்டாவது ஏழ்மையான நாடு புருண்டி. இந்த நாடு நீண்டகாலமாக உள்நாட்டுப் போரை … Read more

Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியலில் 93-வது இடத்தில் இந்தியா..

Post Views: 46 உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்’ நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் … Read more

சிலி நாட்டில் பயங்கர காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு

Post Views: 47 தென் அமெரிக்க நாடான சிலியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சிலி நாட்டின் வல்பரைசோ (Valparaiso) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்து தீக்கிரையாகியுள்ளன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புப் பணிகள் மும்முரமாக்கப்பட்டிருக்கிறது. எனினும், … Read more