வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழப்பு! மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் – கட்டாய மதிய ஓய்வு இடைவேளை..!

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய மதிய ஓய்வு இடைவேளை சட்டம் அமுலுக்கு வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி, நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை நேரடியாக திறந்த வெளியில் அல்லது சூரிய ஒளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயமாக இடைவேளை … Read more

ஹஜ் 2024 – மினாவில் 25 லட்சம் ஹாஜிகள்..

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியா வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் இன்று மாலைக்குள் மினா பகுதியை வந்தடைகின்றனர். ஹஜ் கடமையின் கிரியைகள் இன்று முதல் துவங்குகின்றன. ஹாஜிகள் அனைவரும் இன்று மினாவில் தங்குவார்கள். இந்த ஆண்டு 25 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இன்று நள்ளிரவுக்குப் பிறகு மக்கள் அரஃபா மைதானத்தை நோக்கி செல்லத் துவங்குவார்கள். நாளைய தினம் அரஃபா நாளாகும். அரஃபாவில் உள்ள நமிரா மஸ்ஜிதில் நாளைய தினம் அரஃபா பேருரையை … Read more

ஆவணங்கள் இல்லாமல் மக்கா சென்றால் அபராதம்..!

ஹஜ் அனுமதிச்சீட்டு இல்லாமல் ஜூன் 2 முதல் ஜூன் 20 வரை புனித ஸ்தலங்களுக்கு நுழைய முயன்றால் 10,000 ரியால் வரை அபராதம் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு, அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் எனவும் வெளிநாட்டவர்களாயிருப்பின் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம்..!

இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி வழியாக 2024 ஆம் ஆண்டு ஹஜ் செல்பவர்கள் இறுதி தவணை பணம் செலுத்த வேண்டிய நாள் 27-04-2024 ஆகும். இந்த தேதிக்குள் முழுவதுமாக பணம் செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் விமானம் 09-05-2024 அன்று புறப்படுகிறது. சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் 26-05-2024 முதல் ஆரம்பமாகிறது. குறிப்பிட்ட தேதிகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சவுதியில் புதன்கிழமை ஈத் பெருநாள்..!

சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தால், நாளை ரமலான் 30 பூர்த்தி செய்து, (ஏப்ரல் 10] புதன்கிழமைஈதுல் பித்ர்(ஷவ்வால் பிறை ஒன்று) என அதிகாரப்பூர்வமாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷவ்வால் (ஈதுல் பித்ரு)பிறையை பார்க்க அழைப்பு விடுத்த சவுதி அரசு..!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் தங்கள் சாட்சியத்தை அங்கு பதிவு செய்ய அல்லது அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்புகொள்வதற்கு அருகிலுள்ள நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 … Read more

உலகிலேயே ஒரு நதி கூட இல்லாத நாடு எது தெரியுமா?

உலகில் நதியே இல்லாத நாடு நமக்கு அடுத்ததாக உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நாட்டில் அதிக மழை இல்லை. ஆனால் அந்த நாடு பணக்கார நாடுகளில் ஒன்றாகும். அந்த நாட்டின் பெயர் சவுதி அரேபியா. அங்கு நதியோ ஏரியோ இல்லை. சவுதி அரேபியா பெரும்பாலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆறுகள் இல்லை என்றாலும், இந்த நாடு இரண்டு கடல்களால் … Read more

சவுதிஅரேபியாவில் ரமலானில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு…!

சவுதிஅரேபியாவில் ரமலானில் சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு திறப்பதற்கு முன்பாக விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமும், பஜ்ர் தொழுகைக்கு முன்பாக 10 சதவிகிதமும் அதிகரித்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.வாகனம் ஓட்டும் போது, சாலை விதிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாக பின்பற்றுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு வாகனங்கள் ஓட்டும் போது மிகவும் எச்சரிக்கையாகவும், நீண்ட தூர பயணங்களை திட்டமிடல்களுடன் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.#saudi #saudiarabia … Read more

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டது!

வளைகுடா நாடுகளில் இன்று பிறை பார்க்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சவுதியில் ஹரமைன் பக்கத்தில் பிறை பார்க்கும் குழு பிறை தென்பட்டதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாளை சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் நோன்பு பிடிக்கப்படும்.