Last Updated on: 7th July 2024, 10:30 pm
சவுதியில் உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு சவுதி குடியுரிமை வழங்க இருப்பதாக அரச ஆணை வெளியிடப்பட்டு புகழ்பெற்ற சிலருக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் வரிசையில், இந்திய தொழிலதிபரான ஃபராஸ் காலித்திற்கு சவுதி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்த காலித், நாம்ஷி நிறுவனத்தை உருவாக்கியவராவார். தற்போது இ-காமர்ஸ் நிறுவனமான நூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.