உலககோப்பை தொடரில் வரலாறு படைத்த முகமது ஷமி!

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் முகமது ஷமி! 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் மிக வேகமாக 50 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீரர் முகமது ஷமி!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!!

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா 397 ரன்களை பெற்று 398 ரன்களை இலக்காக நியூசிலாந்துக்கு வைத்தது. ஷமி,ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது

வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!வரலாற்று சாதனை படைத்த இந்தியா!!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி எல்விஎம் 3எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பலகட்ட பயணங்களாக நிலவின் சுற்றுப் பாதையில் நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து கலத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் பிரிந்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டரை சுமுகமக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் … Read more

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டதாக ஐ.நா. தகவல்

வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் அண்மைக் குறிப்பில் இது இடம்பெற்றுள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.இந்தியாவில் வறுமை நிலவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த … Read more

தக்காளியை பாதுகாக்கும் பவுன்சர்கள் வீடியோ வைரல்! வியாபாரி கைது

இந்தியாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள்: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் இந்த சம்பவம் நடைபெற்று வீடியோ வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள காய்கறி விற்பனையாளரான அஜய் யாதவ் என்பவர், கடையில் இரண்டு பவுன்சர்களை நிறுத்தினார். … Read more

பிரதமர் மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல, ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. கேள்வியும் பதிலும்.. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீன் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த … Read more

பசும்பால் விற்று கோடிகளில் பங்களா கட்டிய விவசாயி!

இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் பசும்பால் விற்று கோடிக்கணக்கில் பங்களா கட்டி  சாதித்து காட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் இப்தே, இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துள்ளது. இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு 1998ம் ஆண்டு முதல் பால் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார். லட்சுமி என்ற ஒரே ஒரு பசுவை கொண்டு பால் வியாபாரத்தை தொடங்கியுள்ளார். முதலில் அவருடைய கிராமத்தினருக்கு மட்டுமே பாலை விற்று பிழைப்பு நடத்தியுள்ளார்.அடுத்து படிப்படியாக … Read more

மோதிரம் மூலம் பண பரிவர்த்தனை: இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!

போன்-பே மற்றும் கூகுள்-பே ஆகிய பணபரிவர்த்தனை முறைகளுக்கு மாற்றாக தற்போது மோதிரத்தை ஸ்வைப் செய்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோதிரம் மூலம் பணபரிவர்த்தனை நேரடி பண பரிமாற்றத்தை சுலபமாக்கும் வகையில் முதலில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கும் மாற்றாக ஜி பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை முறைகள் அறிமுகமாகியது. … Read more

சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..

மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் … Read more

இந்திய மாணவிக்கு உலகளவில் குவியும் பாராட்டு! யார் அவர்?

இந்திய மாணவியின் செயலி ஒன்றை கண்டு, Apple நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாராட்டியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.மாணவர்களுக்கான போட்டி2023ஆம் ஆண்டுக்கான Apple Swift Student Challenge போட்டி உலகம் முழுவதும் நடந்தது. இதில் அஸ்மி ஜெயின் என்ற இந்திய மாணவியும் கலந்துகொண்டார். இவர் உருவாக்கிய Eye Track என்ற செயலி வெகுவாக பாராட்டுகளை பெற்றது. மொத்தம் 30 நாடுகளைச் சேர்ந்த 375 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அஸ்மி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மாணவி அஸ்மி ஜெயின் இந்திய … Read more