சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து..!

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்கள் ரத்து. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை. துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்.

UAEல் வெளுத்து வாங்கிய மழை..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுககளின் ஈத் பெருநாள் அறிவிப்பு..!

சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.

அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும் ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் அபுதாபி நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.22 மணிக்கும் அல் ஐனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.15 மணிக்கும் அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் ராஸ் அல் … Read more

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஐந்து பேர் பலி.!பலர் காயம்..!

ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த வியாழன் இரவு 9.30 மணியளவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 17 பேருக்கு மிதமான காயங்களும் 27 பேர் சிறிய காயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஷார்ஜா காவல்துறை அதிகாரிகள் … Read more

இந்தியா UAE இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது ஏர் இந்தியா…!

இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு … Read more

தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் ‘Mother’s Endowment’ தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த பிரச்சாரம் புனிதமான ரமலான் மாதத்துடன் இணைந்து, பெற்றோர்களை கௌரவப்படுத்துதல், கருணை, இரக்கம் மற்றும் சமூகம் முழுவதும் ஒற்றுமை ஆகியவற்றின் … Read more

ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் உலகளாவிய அல் குர்ஆன் கிராஅத் போட்டி.

புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன: 1. Best Recitation Award – Emiratiசிறந்த கிராஅத் விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மட்டும். 2. Best Recitation Award – All Nationalitiesசிறந்த கிராஅத் விருது – உலகளாவிய மக்கள் அனைவரும். 3. Best Recitation Award – People … Read more

5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது..

முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.இப்போது, இந்த ​​செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது.செயலாக்க நேரத்தை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) செவ்வாயன்று ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும், விரைவுபடுத்துவதற்கும், “Work Bundle” என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது.இந்த தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் தேடும் நிறுவனங்கள் மற்றும் … Read more

அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரம் குறைப்பு..!!

பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த ரமலான் மாதத்திற்கான ஊழியர்களின் குறைக்கப்பட்ட வேலை நேரத்தினை தற்பொழுது அமீரக அரசு அறிவித்துள்ளது. அதாவது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் ரமலான் மாதத்தின் போது தினசரி இரண்டு மணி நேரம் … Read more