ஹஜ் 2024: புனித தலங்களுக்கு இடையே வழிபாட்டாளர்களை ஏற்றிச் செல்ல முதன்முறையாக ஏர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்திய சவுதி..!!

சவூதி அரேபியாவில் ஹஜ் எனும் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக பல்வேறு வசதிகளை சவூதி அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தற்பொழுது நிலவும் வெயிலின் தாக்கத்தை தணிக்க முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே நீர் தெளிக்கும் உபகரணங்கள், நிழற்குடைகள் என வழிபாட்டாளர்கள் தங்களின் ஹஜ் கடமைகளை சிரமமின்றி நிறவேற்ற பல வசதிகளை வழங்கி வருகின்றது. அவற்றில் புதிய மற்றும் உலகின் முதல் முறையாக புனித பயணம் மேற்கொள்ளும் வழிபாட்டாளர்களை புனித தலங்களுக்கு இடையே ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லாத … Read more

குழந்தைகளின் உணவில் விளையாடிய சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

குழந்தைகள் உணவுக்கு பிரபலமான, சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே நிறுவனம், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.அந்நிறுவனத் தயாரிப்பான Cerelac என்னும் குழந்தைகள் உணவில் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உணவில் விளையாடிய நிறுவனம்சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேவின் முன்னணி குழந்தைகள் உணவான Cerelacஇல் அதிக அளவு சர்க்கரை இருப்பது சுவிட்சர்லாந்தில் உள்ள Public Eye மற்றும் International Baby Food Action Network என்னும் அமைப்புகள் மேற்கொண்ட … Read more

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் – கட்டாய மதிய ஓய்வு இடைவேளை..!

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய மதிய ஓய்வு இடைவேளை சட்டம் அமுலுக்கு வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி, நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை நேரடியாக திறந்த வெளியில் அல்லது சூரிய ஒளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயமாக இடைவேளை … Read more

ஹஜ் 2024 – மினாவில் 25 லட்சம் ஹாஜிகள்..

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியா வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் இன்று மாலைக்குள் மினா பகுதியை வந்தடைகின்றனர். ஹஜ் கடமையின் கிரியைகள் இன்று முதல் துவங்குகின்றன. ஹாஜிகள் அனைவரும் இன்று மினாவில் தங்குவார்கள். இந்த ஆண்டு 25 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இன்று நள்ளிரவுக்குப் பிறகு மக்கள் அரஃபா மைதானத்தை நோக்கி செல்லத் துவங்குவார்கள். நாளைய தினம் அரஃபா நாளாகும். அரஃபாவில் உள்ள நமிரா மஸ்ஜிதில் நாளைய தினம் அரஃபா பேருரையை … Read more

இனி வேலை தேடுவது சுலபம்; AI-துணை கருவிகளை அறிமுகம் செய்த LinkedIn..!

லிங்க்ட்இன், வேலை தேடுபவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் கருவிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு முதன்முதலில் சோதனை செய்யப்பட்ட இந்த கருவிகள் இப்போது பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, வேலை வாய்ப்புகளை தேடும். புதிய அம்சங்களில் தனிப்பயனாக்கப்பட்ட பயோடேட்டாக்கள், AI-உதவி கவர் லெட்டர் மற்றும் அதிக உரையாடலுடன் வேலை தேடல்கள் ஆகியவை அடங்கும்.வேலை தேடும்போது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதே இதன் நோக்கம்.லிங்க்ட்இன்-இன் AI புஷ் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் இறுதியில் வேலை விண்ணப்ப செயல்முறையை … Read more

குவைத்தில் மத்திய இணை அமைச்சர் வரதன் சிங்: காயமடைந்த இந்தியர்களை சந்தித்து ஆறுதல்…!

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயம் அடைந்த 6 இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இந்தியர்களின் உடலை … Read more

சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த போது வெளிநாட்டினருக்கு எதிரான இந்த வன்முறைக் குற்றம் நடந்துள்ளது.அயோவாவின் மவுண்ட் வெர்னனில் உள்ள தனியார் கலைக் கல்லூரியான கார்னெல் கல்லூரியின் கல்வியாளர்கள் திங்களன்று வடகிழக்கு சீனாவின் ஜிலின் நகரில் உள்ள பெய்ஹுவா பல்கலைக்கழகத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந்த போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. “அந்த நான்கு ஆசிரியர்களுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்த நேரத்தில் … Read more

பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: 600 ஹெக்டேர் தீக்கிரை!

பாரீஸ்,தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதி உள்ளது. கரடு முரடான மலை குன்றுகளுடன் கூடிய இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பிடித்தது. காற்று வீச்சு காரணமாக கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி உள்ள காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை … Read more

கேட்கவே மனம் கலங்குதே”: குவைத்தில் 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழப்பு..!

குவைத் சிட்டி: குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டு 731 இந்தியர்களும், 2023ல் 708 இந்தியர்களும் … Read more

வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்: உலக வங்கி கணிப்பு..!

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டுத் தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஜி.டிபி., வலுவான வளர்ச்சி அடையும்.உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2025ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை … Read more