எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் கடந்த ஜூலை 21ம் தேதி அதிகனமழை பெய்தது. இதனால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிக்கினர்.
மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது. இதில் 81 பேர் பெண்கள். ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எத்தியோப்பியாவில் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் பொதுவானவை. அங்கு ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் என்பதால் நிலச்சரிவு அவ்வப்போது ஏற்படும். ஆனால், தற்போதைய நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...