9.3 C
Munich
Monday, October 7, 2024

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

Last Updated on: 26th June 2024, 06:23 pm

இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, ஆகஸ்டு 15,2024 முதல் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை மற்றும் ஜித்தா இடையே நேரடி கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் இருந்து இன்டிகோ நிறுவனம் வாரம் 42 விமானங்களை சவுதி அரேபியாவிற்கு இயக்க இருப்பதாக இன்டிகோ சர்வதேச விற்பனை பிரிவு தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இன்டிகோ நிறுவனத்தின் தொடர்ச்சியான இந்த நேரடி விமான சேவையின் மூலம் இந்தியா மற்றும் சவுதி இடையே சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here