Last Updated on: 27th June 2024, 07:36 pm
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், இந்த ஆண்டு மே மாதம் விமான அட்டவணையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் மிகவும் துல்லியமான செயல்பாட்டில் முதலிடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் விமானங்களின் செயல்பாடுகளை கணக்கீடு செய்யும் சிரியம் டியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கிங் காலித் சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிரியம் டியோவின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. ஐந்து மாத இடைவெளியில், துல்லியமான நேரத்தில் செயல்படும் விமான நிலையமாக முதலவாது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.