இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கிடையே விளையாட்டு வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவில் பாண்டங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே சிலிவங்கி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த சூழலில், திடீரென்று சுபாங் அணியைச் சேர்ந்த செப்டியன் ரகர்ஜா என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அப்போது மைதானத்திலேயே அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டபோது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். கால்பந்து வீரரின் திடீர் உயிரிழப்பால், இந்தோனேசியா கால்பந்து உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.