கேட்கவே மனம் கலங்குதே”: குவைத்தில் 2 ஆண்டுகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழப்பு..!

குவைத் சிட்டி: குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் 1,400 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலியாகினர். 6 இந்தியர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குவைத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டு 731 இந்தியர்களும், 2023ல் 708 இந்தியர்களும் … Read more

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 28 பேர் பலி, 20 பேர் காயம்..!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து குவெட்டாவுக்கு … Read more

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ..!

வியத்நாமிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டுத் தலைநகர் ஹனோயின் மத்தியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய பொருள்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை அணுக வெறும் 2 மீட்டர் இடைவெளி கொண்ட குறுகிய பாதை மட்டுமே இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புப் படையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் பெரிய குழாய்களைப் … Read more

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி..!

அமெரிக்கா: இரண்டு மாதங்களுக்கு முன், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன் என்ற அமெரிக்கர் உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் வசித்து வந்த 62 வயதான ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன், மார்ச் மாதம் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.இந்நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை குழு ஸ்லேமனின் மறைவு குறித்து ஆழ்ந்த … Read more

பிரேசிலில் கனமழை: வெள்ளப்பெருக்கால் 1 லட்சம் வீடுகள் சேதம்..!

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே அவர்கள் தங்குவதற்காக … Read more

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் … Read more