16.9 C
Munich
Tuesday, September 10, 2024

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ..!

Must read

Last Updated on: 25th May 2024, 09:11 pm

வியத்நாமிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டுத் தலைநகர் ஹனோயின் மத்தியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய பொருள்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை அணுக வெறும் 2 மீட்டர் இடைவெளி கொண்ட குறுகிய பாதை மட்டுமே இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புப் படையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் பெரிய குழாய்களைப் பயன்படுத்தி தீயணைப்புப் படையினர் நெருப்பை அணைத்ததாக அரசு ஊடகம் தெரிவித்தது.

- Advertisement -spot_img

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article