ஒருபுறம் நிலநடுக்கம்… மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்..!

Post Views: 57 நிலநடுக்கம்ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது கம்சட்காவில் இருந்து 90 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 50 கி.மீ., ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க … Read more

‘அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்’: டொனால்ட் டிரம்ப் பேச்சு 

Post Views: 65 வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.செனட் வேட்பாளர் பெர்னி மோரேனோவுக்காக ஓஹாயோ மாநிலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் இந்த வார்த்தைகளை கூறினார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் போட்டியிட உள்ளனர்.சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது: இந்திய வெளியுறவுத் துறை பதிலடி

Post Views: 105 இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்அண்மையில் கூறுகையில், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:சிஏஏ சட்டத்தின் அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது என்று … Read more

ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

Post Views: 166 ரம்ஜான் தொடங்கியவுடன் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பணவீக்கத்தின் பாதிப்பை உணர்ந்தாலும், தற்போது பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  ரம்ஜான் பணவீக்கம் இருக்கும்போது வெங்காயம் கிலோ 300 ரூபாய்க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் 200 ரூபாய் என்ற விலையிலும் விற்கின்றன. ரம்ஜான் பணவீக்கம்புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் ரமலான் நோன்பு மற்றும் இப்தார் நோன்பில் சிக்கனமாக இருக்க … Read more

சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங்.. இலங்கையில் 21 இந்தியர்கள் கைது

Post Views: 46 கொழும்பு:இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ அல்லது சம்பளம் பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி, சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்த 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை இருக்கும். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர் … Read more

சீனா: உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து;ஒருவர் உயிரிழந்தார்

Post Views: 64 சீனாவில் கெபெய் மாகாணத்தின் சான்கி நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது திடீரென உணவக சமையலறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உணவகம் முழுவதும் தீப்பரவி கட்டிடம் இடிந்தது. இதில் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டனர். … Read more

உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா.

Post Views: 109 கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிலிப் லாஸரினி என்ற ஐ.நா. பிரதிநிதி பகிர்ந்த பதிவில், “காசாவில் கடந்த 4 மாதங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல்வேறு மோதல்களில் உயிரிழந்த ஒட்டுமொத்த குழந்தைகளின் … Read more

மரணத்தில் இருந்து நூலிழையில் தப்பிய விமானப் பயணிகள்: திகைப்படைய வைத்த இழப்பீடு

Post Views: 63 நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென்று கோளாறில் சிக்க, அதில் பயணித்த 50 பேர்கள் ரத்த காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மொத்த பேர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அனைவருக்கும் சிற்றுண்டி மரணத்தை ஏமாற்றி உயிர் தப்பிய Latam Airlines பயணிகள் அனைவருக்கும் சிற்றுண்டி அளித்து அந்த சம்பவத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னியில் இருந்து ஆக்லாந்து நகருக்கு புறப்பட்ட Latam Airlines விமானம் திடீரென்று நடுவானில் … Read more

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானம்… சாலையில் பார்க் செய்யும் ஓனர்கள்… எங்கு இருக்கு தெரியுமா?

Post Views: 690 உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை இதுவரை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஏனென்றால், இது கொஞ்சம் காஸ்ட்லியான விவகாரம். அதாவது நாம் சொல்லப் போகும் இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது. அமெரிக்காவின் ஒரு சிறிய நகரத்தின் வீதி தான் இது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி…

Post Views: 102 அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு … Read more