சீனா: உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து;ஒருவர் உயிரிழந்தார்

சீனாவில் கெபெய் மாகாணத்தின் சான்கி நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அப்போது திடீரென உணவக சமையலறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உணவகம் முழுவதும் தீப்பரவி கட்டிடம் இடிந்தது. இதில் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டனர். படுகாயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து அதிகாரி கூறுகையில்,இந்த விபத்தானது காலை 7.54 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிலிண்டர் எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 22 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times