16.1 C
Munich
Saturday, July 27, 2024

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானம்… சாலையில் பார்க் செய்யும் ஓனர்கள்… எங்கு இருக்கு தெரியுமா?

Must read

Last Updated on: 12th March 2024, 04:43 pm

உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை இதுவரை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஏனென்றால், இது கொஞ்சம் காஸ்ட்லியான விவகாரம். அதாவது நாம் சொல்லப் போகும் இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது.

அமெரிக்காவின் ஒரு சிறிய நகரத்தின் வீதி தான் இது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய கிராமத்தில் வேலைக்கு செல்லவும், தங்கள் அலுவலகத்திற்குச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.

விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை. கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர். இவர்களுடன் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.

கமரூன் ஏர்பார்க் கடந்த 1963-ல் கட்டப்பட்டது. இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில் தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகத்தான் காமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.

- Advertisement -spot_img

More articles

12 COMMENTS

  1. After looking at a handful of the articles on your web page, I really like your way of writing a blog. I added it to my bookmark webpage list and will be checking back soon. Please visit my website as well and tell me how you feel.

  2. The next time I read a blog, Hopefully it does not disappoint me just as much as this particular one. I mean, Yes, it was my choice to read through, but I actually believed you would have something interesting to say. All I hear is a bunch of moaning about something you can fix if you weren’t too busy searching for attention.

  3. Spot on with this write-up, I actually feel this website needs a lot more attention. I’ll probably be back again to read more, thanks for the info.

  4. That is a good tip especially to those new to the blogosphere. Simple but very accurate information… Thank you for sharing this one. A must read article!

  5. This is the perfect webpage for anybody who wishes to understand this topic. You know so much its almost hard to argue with you (not that I really will need to…HaHa). You certainly put a brand new spin on a subject which has been discussed for decades. Excellent stuff, just great.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article