Last Updated on: 17th March 2024, 11:57 pm
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.செனட் வேட்பாளர் பெர்னி மோரேனோவுக்காக ஓஹாயோ மாநிலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் இந்த வார்த்தைகளை கூறினார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் போட்டியிட உள்ளனர்.சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவர் மீண்டும் ஒருவருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.