இந்திய சிறுவனுக்கு துபாய் போலீஸ் பாராட்டு..!

துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட கைக்கடிகாரத்தை போலீசிடம் ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ், தந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். தந்தையுடன் வெளியே சென்ற போது, விலை உயர்ந்த வாட்ச் ஒன்று கீழே கிடந்த வாட்சை பார்த்த சிறுவன் அதை எடுத்து துபாயின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன் இணையதள முகவரியில் பதிவு செய்தார். இதனை பார்த்த போலீசார் வாட்சை பெற்றுக் கொண்டனர். தொடர் விசாரணையில் துபாய்க்கு … Read more

அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி…

புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர்.மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர். இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக கொடி, இந்திய தேசியக்கொடிகளால் … Read more

அமெரிக்காவில் மோடிக்கு ஆதரவாக பேரணி…!

வாஷிங்டன்: பிரதமர் மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் ஆதரவு திரட்டும் பேரணி அமெரிக்காவில் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மோடியின் நலத்திட்டங்கள், மற்றும் இந்தியாவுக்கு ஆதரவு வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. உபி., முதல்வர் யோகியையும் பாராட்டி படங்கள் இடம்பெற்றிருந்தன. பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.மோடி, மோடி என்றும், பாரத் மாதாக்கி ஜே … Read more

அருணாச்சலில் மேலும் 30 இடங்களுக்கு புது பெயர் வைத்து சீனா…

பீஜிங்: நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரி அடாவடியில் ஈடுபட்டு வரும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்கள் அறிவித்து, தன் சீண்டலை தீவிரப்படுத்தியுள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது.தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தென் பகுதி அது என்று கூறி வருகிறது. இதற்கு, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 13,000 அடி உயரத்தில் … Read more

இந்தியா UAE இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது ஏர் இந்தியா…!

இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு … Read more

மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்..இந்தியா?

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது: இந்திய வெளியுறவுத் துறை பதிலடி

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்அண்மையில் கூறுகையில், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:சிஏஏ சட்டத்தின் அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது என்று நினைக்கிறோம். அமெரிக்க வெளியுறவுத்துறையின் … Read more

ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

ரம்ஜான் தொடங்கியவுடன் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பணவீக்கத்தின் பாதிப்பை உணர்ந்தாலும், தற்போது பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  ரம்ஜான் பணவீக்கம் இருக்கும்போது வெங்காயம் கிலோ 300 ரூபாய்க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் 200 ரூபாய் என்ற விலையிலும் விற்கின்றன. ரம்ஜான் பணவீக்கம்புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் ரமலான் நோன்பு மற்றும் இப்தார் நோன்பில் சிக்கனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது.மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். 2024, மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியர்களை லட்சத்தீவுகள் செல்லுமாறு … Read more

உலகின் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக நாடுகளில் பெரும்பாலானவை ராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான ராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் ராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சில நாடுகளின் ராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில், மிரர் நவ் வெளியிட்ட செய்தியின்படி உலகிலேயே மிகவும்வலிமையான ராணுவப் … Read more