Last Updated on: 14th June 2024, 12:26 pm
உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டுத் தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகம் அடைந்துள்ளது.
இந்தியாவின் ஜி.டிபி., வலுவான வளர்ச்சி அடையும்.உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். 2025ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும். 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை ஒரு நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதம் வளரும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.