Last Updated on: 2nd April 2024, 01:54 am
வாஷிங்டன்: பிரதமர் மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் ஆதரவு திரட்டும் பேரணி அமெரிக்காவில் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மோடியின் நலத்திட்டங்கள், மற்றும் இந்தியாவுக்கு ஆதரவு வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. உபி., முதல்வர் யோகியையும் பாராட்டி படங்கள் இடம்பெற்றிருந்தன. பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.மோடி, மோடி என்றும், பாரத் மாதாக்கி ஜே என்றும் கோஷங்கள் எழுப்பினர்.