எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? – பாகிஸ்தான் அரசு விளக்கம்

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸ் தள சேவை பாகிஸ்தானில் முடக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் எக்ஸ் தள சேவையில் பல்வேறு தடங்கல் இருந்துவந்தன. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையின்போது … Read more

பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!

லாகூர்:பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பாகிஸ்தானில் 12 தொழிலாளர்கள் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சிக்கி, 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் … Read more

ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

ரம்ஜான் தொடங்கியவுடன் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பணவீக்கத்தின் பாதிப்பை உணர்ந்தாலும், தற்போது பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  ரம்ஜான் பணவீக்கம் இருக்கும்போது வெங்காயம் கிலோ 300 ரூபாய்க்கும், வாழைப்பழம் ஒரு டஜன் 200 ரூபாய் என்ற விலையிலும் விற்கின்றன. ரம்ஜான் பணவீக்கம்புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் ரமலான் நோன்பு மற்றும் இப்தார் நோன்பில் சிக்கனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். … Read more

பாகிஸ்தானில் 2-வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் இன்று பிரதமராக பதவியேற்பு..

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலை யில் அவர் 2-வது முறையாக பிரதமராகிறார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதை யடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் பதவி ஏற்கிறார். கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை அவர் பிரதமராக … Read more

பாகிஸ்தானின் முதல் பெண் முதலமைச்சரான மரியம் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை மரியம் பெற்றார். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பிரதமர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக மரியம் நவாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த மரியம்?பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவராக உள்ள மரியம் நவாஸ் ஷெரீப் 220 … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இழுபறி… நவாஸ் ஷெரீப் vs இம்ரான் கான்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. மொத்தமுள்ள 266 இடங்களில் 250 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் … Read more

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முந்தும் இம்ரான் கான் கட்சி!

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தேசிய அவைக்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி … Read more

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் … Read more