காசாவில் ஐ.நா. பணியாளர்கள் பலி: தவறுதலாக தாக்குதல் என இஸ்ரேல் ஒப்புதல்- அமெரிக்கா கண்டனம்

இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள்.கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி … Read more

காசா பகுதியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 8.22 கோடி நன்கொடை- இலங்கை அரசு

தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, காசா மக்கள் … Read more

காசாவில் போர் நிறுத்தம்.. கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள்! சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் முற்றுகை..!

சான் பிரான்சிஸ்கோ: காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை பல்வேறு நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு அமெரிக்கர்கள் சிலர் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு … Read more

உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா.

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிலிப் லாஸரினி என்ற ஐ.நா. பிரதிநிதி பகிர்ந்த பதிவில், “காசாவில் கடந்த 4 மாதங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல்வேறு மோதல்களில் உயிரிழந்த ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகம். கடந்த … Read more

பசியால் வாடும் காசா மக்கள்… ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்… – பின்னணி என்ன?

காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல்- காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உதவி கோரி வந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மற்றொரு பயங்கரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த … Read more

காசாவில் வீடுகள் மீதான இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் 17 பேர் பலி; 100+ காயம்

மத்திய காசா பகுதியில் உள்ள வீடுகள்மீது இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் உயிர் பலிகள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. மக்களுக்கு அடிப்படை … Read more

“நெருங்கும் ரமலான்… காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” – ஜோ பைடன் புதிய தகவல்

ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேலும் சளைக்காமல் போர் … Read more

வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி 

அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிடையே செயல்பட்டு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் சண்டையை நிறுத்தவும் முயன்று வருகின்றனர்.இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அத்தகைய ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்று நியூயார்க்கிற்கு … Read more

காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவும் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்கவும் முஸ்லீம் நாடுகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

Hamas To Get Its Own Iron Dome To Counter Israeli Air Attacks

Breaking News: Iran calls on Muslim nations to sever ties with Israel and boycott Israeli products amid Gaza genocide இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட அனைத்து முஸ்லீம் நாடுகளும் தங்களது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை துண்டித்து இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்குமாறு ஈரான் தூதர் வலியுறுத்தினார். மேலும், இஸ்ரேலின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவ அனைத்து முஸ்லிம் நாடுகளும் தங்கள் எல்லைகளைத் திறக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாலஸ்தீனம் தொடர்பாக … Read more