சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Post Views: 99 சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Post Views: 68 நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. போர்ட் மோர்ஸ்பை, பப்புவா நியூ கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 51 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், அருகிலுள்ள நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கி.மீ. தொலைவில் … Read more

மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு!

Post Views: 79 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து … Read more

மேற்கு சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு!

Post Views: 62 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை மேற்கு சிலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10.0 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 41.45 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 84.63 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

ஒருபுறம் நிலநடுக்கம்… மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்..!

Post Views: 57 நிலநடுக்கம்ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது கம்சட்காவில் இருந்து 90 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 50 கி.மீ., ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க … Read more

குலுங்கியது கனடா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்

Post Views: 64 ஒட்டாவா: கனடாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதல் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. வட அமெரிக்க நாடுகளில் ஒன்று கனடா. இந்த நிலையில் கனடாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கவுர் தீவில் உள்ள குட்டி நகரமான டோபினோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை … Read more

ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Post Views: 54 ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.02 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் … Read more

சவுதியில் இன்று சிறிய நிலநடுக்கம்..!

Post Views: 138 சவுதி அரேபியாவின் மத்திய மாகாணத்தை ஒட்டியுள்ள ஹைல் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 28-06-2024 (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணிக்கு அல்ஷனான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 3.6 அளவு பதிவானதாக புவியியல் ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் கைல் தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் சுமார் 5.50 கி.மீ தூரம் வரை இருந்ததாகவும், மக்கள் நில அதிர்வை சில நொடிகள் … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

Post Views: 31 துஷான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கோரோக் அருகே 120 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

Post Views: 46 டோக்கியோ ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Exit mobile version