ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Post Views: 53 ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.02 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் … Read more

மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்..இந்தியா?

Post Views: 1,227 உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது.

சர்வதேச மகளிர் தினம்: டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்..!

Post Views: 88 உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலை சோஃபி டியாவோ என்ற டூடுல் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்தியலாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் (‘Invest in Women: Accelerate Progress) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு … Read more

மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்… உயிர் தப்பிய மகன் – அது எப்படி?

Post Views: 103 World Bizarre News: இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாரா ஹெட்ஜஸ். 40 வயதான சாரா, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் அவரது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்த போது, அவரின் கவனம் திடீரென அவரது 3 வயது மகனான தாமஸ் மீது சென்றுள்ளது. அந்த நேரத்தில், தாமஸின் கண்களில் பூனையின் கண்களில் காண்பது போன்ற திடீர் வெள்ளை நிற பளபளப்பு தெரிவது … Read more

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 

Post Views: 53 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் … Read more

வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி 

Post Views: 92 அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிடையே செயல்பட்டு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் சண்டையை நிறுத்தவும் முயன்று வருகின்றனர்.இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அத்தகைய ஒப்பந்தம் எப்போது … Read more

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா சட்டம் அமலுக்கு வந்தது..!

Post Views: 61 சவுதி அரேபியாவில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை மீறி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத நிறுவனங்களுக்கு, கேமரா ஒன்றிற்கு ஆயிரம் ரியால்கள் என்கிற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முந்தும் இம்ரான் கான் கட்சி!

Post Views: 2,261 பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தேசிய அவைக்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் … Read more

Exit mobile version