சீனாவில் பூனைகளுக்கும் வந்தது கொரோனா!!

Post Views: 136 பெய்ஜிங்: சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, … Read more

சீனாவில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Post Views: 92 மத்திய சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஷா, மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. … Read more

அருணாச்சலில் மேலும் 30 இடங்களுக்கு புது பெயர் வைத்து சீனா…

Post Views: 198 பீஜிங்: நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரி அடாவடியில் ஈடுபட்டு வரும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்கள் அறிவித்து, தன் சீண்டலை தீவிரப்படுத்தியுள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது.தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தென் பகுதி அது என்று கூறி வருகிறது. இதற்கு, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்தில் இருந்து, … Read more

சீனா: உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து;ஒருவர் உயிரிழந்தார்

Post Views: 62 சீனாவில் கெபெய் மாகாணத்தின் சான்கி நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது திடீரென உணவக சமையலறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உணவகம் முழுவதும் தீப்பரவி கட்டிடம் இடிந்தது. இதில் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டனர். … Read more

ரயில் ஏற ஸ்டேஷன் போக வேண்டாம்… வீட்டின் வாசலுக்கே வரும்… எங்கு தெரியுமா?

Post Views: 51 கட்டடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் சாத்தியமே இல்லை என நினைக்கும் ஒரு விஷயத்தை சாதித்திருக்கிறது சீனா. இந்த புதிய ரயில் தொழில்நுட்பம் மூலம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது சீனாவின் ரயில்வே அமைப்பு மிகப்பெரியது. சீனாவில் மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் ரயில் நிலையமும் செயல்படுகிறது. இந்த 19 மாடி கட்டடத்தில் 6வது மற்றும் 8வது தளத்தின் இடையே … Read more

தொடர்ந்து 2-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை: மீண்டும் இந்தியா முன்னிலை..!

Post Views: 59 சீனாவின் மக்கள்தொகை 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் கோவிட்-19 இறப்புகளின் அலை காரணமாக சீனாவின் மக்கள்தொகை 2023 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது, இது தொடர்பாக நாட்டின் தேசிய புள்ளிவிவரங்கள் துறை (NBS) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் … Read more

கொத்து கொத்தாக காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள்… நிரம்பி வழியும் மருத்துவமனைகள்… சீனாவின் என்ன நடக்கிறது?

Post Views: 966 சீனாவில் குழந்தைகள் கொத்து கொத்தாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா போன்று புதுவித கிருமியால் இந்த காய்ச்சல் பரவவில்லை என்று அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகிற்கே மரண பயத்தை காட்டியது. அதன் பாதிப்பு ஓய்ந்து வரும் நிலையில், தற்போது நிமோனியா நோய் பாதிப்பைச் சமாளிக்க சீனா போராடி வருகிறது. அங்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் … Read more

ஒரு நாள் முதல்வன் பழசு.. ஒரு நாள் கணவன் தான் இப்போ டிரெண்ட்.! சீனாவை பாருங்க! காரணம் வினோதம் தான்

Post Views: 79 பெய்ஜிங்: முதல்வன் திரைப்படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக வந்து நாம் பார்த்திருப்போம்.. ஆனால், சீனாவில் இங்கு ஒரு நாள் திருமணம் டிரெண்டாகி வருகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கடந்த ஜூலை மாதம் வடக்கு சீனாவில் உள்ள கிராமம் ஒன்றில் கிராமத்துத் திருமணம் விழா ஒன்று நடைபெற்றது. இது பார்க்க வழக்கமான திருமண விழாவைப் போலவே இருந்தது.அன்றைய தினம் அங்கு ஏகப்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். அங்கு அந்த ஜோடி திருமணம் … Read more

140 ஆண்டுகளில் இல்லாத மழை… 27 பேர் பலி.. கொட்டும் மழையால் உருக்குலைந்த சீனா!

Post Views: 111 உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு ஒவ்வொரு மாதிரியாக பிரதிபலித்து வருகிறது. சில நாடுகளில் கொளுத்தும் வெயில், உயரும் வெப்பநிலை, தண்ணீர் பஞ்சம் என மக்கள் வறட்சியை சந்தித்து வருகின்றனர். சில நாடுகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கன மழை கொட்டி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த … Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. கட்டடங்கள் இடிந்தால் அலறிய மக்கள்.. ரிக்டரில் 5.5 என பதிவு

Post Views: 87 சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்த நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபால் இரவில் டெல்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டது. … Read more

Exit mobile version