டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?!

Post Views: 489 அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது. வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் … Read more

இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?!

Post Views: 421 இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, … Read more

ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!

Post Views: 441 ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.  அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார். சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து … Read more

இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!

Post Views: 441 இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மி மற்றும் வங்கதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!

Post Views: 240 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் … Read more

வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

Post Views: 330 முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. “கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு … Read more

டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா?!

Post Views: 200 கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது. ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், 2025ஆம் ஆண்டில் சீனா முன்னுள்ள 5 முக்கிய சவால்கள் என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

உலகெங்கும் மெல்ல நடக்கும் மாற்றம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்யும் செயல்! இது பெரிய பிரச்சினை தான்!

Post Views: 289 பெய்ஜிங்: க்ரீன் எனர்ஜி மற்றும் டேட்டா பிராசஸிங் சென்டர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களுக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதை வைத்து இப்போது பக்காவாக காய் நகர்த்தும் சீனா, வரும் காலத்தில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து நகர்ந்து வருகிறது. உலகம் இப்படி ஸ்மார்ட் கருவிகளைக் கொண்டதாக மாறும் சூழலில், இதற்கான எனர்ஜி தேவையும் … Read more

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?!

Post Views: 216 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன் மற்றும் ஹர்ஸ்டினின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் தீயின் பிடியில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை கென்னத் … Read more

மொசாட்: ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் இரானிய அணு விஞ்ஞானி கொல்லப்பட்டது எப்படி?!

Post Views: 179 ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கருப்பு நிற காரில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஃபக்ர்சாதே காரில் இருந்து கீழே விழுந்தார். அவர் … Read more

Exit mobile version