அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிடையே செயல்பட்டு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் சண்டையை நிறுத்தவும் முயன்று வருகின்றனர்.இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அத்தகைய ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்று நியூயார்க்கிற்கு விஜயம் செய்தபோது பிடனிடம் கேட்கப்பட்டது,
பாரிஸில் சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்த தலைவர்கள் அதற்கு பதிலளித்த அவர், “எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாம் நெருக்கிவிட்டோம், நாம் நெருக்கிவிட்டோம். ஆனால் இன்னும் முடியவில்லை என்று என்னிடம் கூறுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.”அடுத்த திங்கட்கிழமைக்குள் நாம் போர்நிறுத்தம் செய்வோம் என்று நான் நம்புகிறேன்” என்று பைடன் மேலும் கூறியுள்ளார்.இஸ்ரேல், ஹமாஸ் உட்பட பல நாட்டு பிரதிநிதிகள் கடந்த வார இறுதியில் பாரிஸில் சந்தித்து, “தற்காலிக போர்நிறுத்தத்திற்கான பணயக்கைதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படை வரையறைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு புரிதலுக்கு வந்தனர்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.