பாகிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!

Post Views: 47 லாகூர்:பாகிஸ்தானில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்துக்கு நடுவே குழந்தைகளை பாதுகாத்த நர்ஸ்களின் துணிச்சல்..!

Post Views: 46 தைவானில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நர்ஸ்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது. … Read more

தைவான் பூகம்பத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

Post Views: 43 ஜப்பானில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.2024 ஆம் ஆண்டு புத்தாண்டு … Read more

தைவான் நிலநடுக்கத்தில் 2 இந்தியர்கள் மாயம்..

Post Views: 84 தைபே:தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் இடிந்தன. இதில் 9 பேர் பலியானார்கள். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவை சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் உள்ள டாரோகோ பள்ளத்தாக்கில் கடைசியாக இருந்தனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே … Read more

தைவானில் 25 ஆண்டுகளில் கடுமையான நிலநடுக்கம்: 4 பேர் பலி- பலர் காயம்

Post Views: 33 கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் … Read more

Exit mobile version