ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

டோக்கியோ

ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Leave a Comment

Exit mobile version