Median UI Blogger Template

Download Here : Median UI Fast loadingLoads in under 1 second, compatible with major browsers Easy to useEasy to install and customize within minutes Fully responsiveAutomatically adapts to all screen sizes SEO optimizedPass the rich snippet test Ad optimizedReady-to-use high CTR ad placements CustomizableOrganized layout, everything can be found easily Professionally well codedMore understandable code … Read more

கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது..

கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.இந்நிலையில், பல மில்லியன் டாலர் தங்கக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் குறைந்தது இரண்டு இந்திய வம்சாவளி ஆண்களும் அடங்குவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் மேலும் மூன்று நபர்களுக்கு கனேடிய அதிகாரிகள் வாரண்ட் பிறப்பித்துள்ளனர் என்று பீல் பிராந்திய காவல்துறை(பிஆர்பி) தெரிவித்துள்ளது.ஏப்ரல் 17, 2023அன்று, 22 மில்லியனுக்கும் அதிகமான கனேடிய டாலர்கள் மதிப்புள்ள … Read more

இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம்..!

இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி வழியாக 2024 ஆம் ஆண்டு ஹஜ் செல்பவர்கள் இறுதி தவணை பணம் செலுத்த வேண்டிய நாள் 27-04-2024 ஆகும். இந்த தேதிக்குள் முழுவதுமாக பணம் செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் விமானம் 09-05-2024 அன்று புறப்படுகிறது. சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் 26-05-2024 முதல் ஆரம்பமாகிறது. குறிப்பிட்ட தேதிகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வங்காளதேசத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 14 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? – பாகிஸ்தான் அரசு விளக்கம்

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸ் தள சேவை பாகிஸ்தானில் முடக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் எக்ஸ் தள சேவையில் பல்வேறு தடங்கல் இருந்துவந்தன. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையின்போது … Read more

சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து..!

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்கள் ரத்து. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை. துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்.

UAEல் வெளுத்து வாங்கிய மழை..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்

அமெரிக்கா | காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு – 2024ல் 11-வது சம்பவம் இது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.25 வயதான அர்பத்தின் உடல் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் மீட்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் அவரது மரணத்தை உறுதி செய்துள்ளது.நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில், “முகமது அப்துல் அர்பத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் என்பதை அறிந்து வேதனை … Read more

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுககளின் ஈத் பெருநாள் அறிவிப்பு..!

சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.

சவுதியில் புதன்கிழமை ஈத் பெருநாள்..!

சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தால், நாளை ரமலான் 30 பூர்த்தி செய்து, (ஏப்ரல் 10] புதன்கிழமைஈதுல் பித்ர்(ஷவ்வால் பிறை ஒன்று) என அதிகாரப்பூர்வமாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.