Last Updated on: 17th April 2024, 08:47 pm
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது.
இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்