அமீரகம் மற்றும் வளைகுடா நாடுககளின் ஈத் பெருநாள் அறிவிப்பு..!

சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.

அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும் ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் அபுதாபி நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.22 மணிக்கும் அல் ஐனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.15 மணிக்கும் அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் ராஸ் அல் … Read more

இந்தியா UAE இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது ஏர் இந்தியா…!

இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு … Read more

தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் ‘Mother’s Endowment’ தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த பிரச்சாரம் புனிதமான ரமலான் மாதத்துடன் இணைந்து, பெற்றோர்களை கௌரவப்படுத்துதல், கருணை, இரக்கம் மற்றும் சமூகம் முழுவதும் ஒற்றுமை ஆகியவற்றின் … Read more

அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரம் குறைப்பு..!!

பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த ரமலான் மாதத்திற்கான ஊழியர்களின் குறைக்கப்பட்ட வேலை நேரத்தினை தற்பொழுது அமீரக அரசு அறிவித்துள்ளது. அதாவது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் ரமலான் மாதத்தின் போது தினசரி இரண்டு மணி நேரம் … Read more

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருவதோடு, இரு நாடுகளும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு … Read more

94 ஏக்கரில் வீடு… 700 கார்கள்… உலகின் பணக்கார குடும்பம் இதுதான்… யார் இவர்கள் தெரியுமா?

துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 4,078 கோடி மதிப்பிலான ஜனாதிபதி மாளிகை, எட்டு தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பணக்காரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், MBZ என்றும் அறியப்படுகிறார். அரச குடும்பத்திற்கு தலைமை தாங்கும் இவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். எமிராட்டி அரச … Read more

UAE: அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஷெங்கன் விசாவிற்கு செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

தொற்றுநோய்க்குப் பிறகு போக்குவரத்து துறை விரைவாக மீண்டு வருவதால், ஷெங்கன் நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் விசா நியமனங்களுக்காக செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த 26 நாடுகளுக்கு விசா ஸ்லாட்டுகள் கிடைக்காததால், செப்டம்பர் நடுப்பகுதிக்குப் பிறகுதான் UAE பயணிகள் ஷெங்கன் நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று போக்குவரத்து துறை நிர்வாகிகள் கூறுகின்றனர். “ஒரு சந்திப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, மேலும் சில நாடுகள் விசாவைப் பெறுவதற்குத் இன்னும் திறக்கவில்லை. … Read more