9.3 C
Munich
Monday, October 7, 2024

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Last Updated on: 13th February 2024, 09:08 pm

அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருவதோடு, இரு நாடுகளும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு சென்றடைந்தார்.

இன்று மாலை ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளார்கள். முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் வந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். மோடி – அமீரக அதிபர் இடையேயான சந்திப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here