Last Updated on: 20th January 2024, 08:38 pm
துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 4,078 கோடி மதிப்பிலான ஜனாதிபதி மாளிகை, எட்டு தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பணக்காரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், MBZ என்றும் அறியப்படுகிறார். அரச குடும்பத்திற்கு தலைமை தாங்கும் இவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். எமிராட்டி அரச குடும்பத்திற்கு ஒன்பது குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
உலக எண்ணெய் ரிசர்வ்களில் சுமார் ஆறு சதவிகிதம் இந்த அரச குடும்பத்திற்கு சொந்தமானது. அது மட்டுமின்றி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மற்றும் பாடகர் ரியானாவின் பியூட்டி பிராண்டான ஃபென்டி முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல பிரபலமான நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. அபுதாபி ஆட்சியாளரின் இளைய சகோதரர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானிடம் 700 க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில் ஐந்து புகாட்டி வேய்ரான்கள், ஒரு லம்போர்கினி ரெவென்டன், ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் CLK GTR, ஒரு ஃபெராரி 599XX மற்றும் ஒரு McLaren Mc12 போன்ற உலகின் மிகப்பெரிய SUV ஆகியவை அடங்கும்.
அபுதாபியில் உள்ள கில்டட் காஸ்ர் அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் இந்த அரச குடும்பம் வாழ்கிறது. இது UAE-ல் உள்ள பல அரண்மனைகளில் மிகப்பெரியதாகும். ஏறக்குறைய 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய குவிமாட அரண்மனையில் 3,50,000 படிகங்களால் ஆன சரவிளக்கு மற்றும் மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன. ஜனாதிபதியின் சகோதரரான Tahnoun bin Zayed Al Nahyan, குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். அதன் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28,000 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 235 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்நிறுவனம், விவசாயம், ஆற்றல், பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களுக்குச் சொந்தமானது மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, பாரிஸ் மற்றும் லண்டன் உட்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை துபாய் ராயல்ஸ் வைத்திருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு நியூயார்க்கரின் அறிக்கையின்படி, துபாய் அரச குடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஒப்பிடக்கூடிய சொத்துக்களைக் கொண்டிருந்தது. 2008ஆம் ஆண்டில், MBZ-ன் அபுதாபி யுனைடெட் குழு UK கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டியை ரூ. 2,122 கோடிக்கு வாங்கியது. மான்செஸ்டர் சிட்டி, மும்பை சிட்டி, மெல்போர்ன் சிட்டி மற்றும் நியூயார்க் சிட்டி கால்பந்து கிளப்புகளை இயக்கும் சிட்டி கால்பந்து குழுமத்தின் 81 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
hello there and thank you for your info – I’ve definitely picked
up something new from right here. I did however expertise some technical issues
using this site, since I experienced to reload the web site lots of times previous
to I could get it to load correctly. I had been wondering
if your web host is OK? Not that I am complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google and
could damage your high quality score if ads and marketing with Adwords.
Anyway I am adding this RSS to my email and can look out
for much more of your respective intriguing content. Make sure you update
this again soon.. Escape rooms hub