வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் உயிரிழப்பு!

Post Views: 159 சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழப்பு! மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை

ஹஜ் 2024: புனித தலங்களுக்கு இடையே வழிபாட்டாளர்களை ஏற்றிச் செல்ல முதன்முறையாக ஏர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்திய சவுதி..!!

Post Views: 255 சவூதி அரேபியாவில் ஹஜ் எனும் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக பல்வேறு வசதிகளை சவூதி அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தற்பொழுது நிலவும் வெயிலின் தாக்கத்தை தணிக்க முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே நீர் தெளிக்கும் உபகரணங்கள், நிழற்குடைகள் என வழிபாட்டாளர்கள் தங்களின் ஹஜ் கடமைகளை சிரமமின்றி நிறவேற்ற பல வசதிகளை வழங்கி வருகின்றது. அவற்றில் புதிய மற்றும் உலகின் முதல் முறையாக புனித பயணம் மேற்கொள்ளும் வழிபாட்டாளர்களை புனித தலங்களுக்கு இடையே ஏற்றிச் … Read more

ஆவணங்கள் இல்லாமல் மக்கா சென்றால் அபராதம்..!

Post Views: 203 ஹஜ் அனுமதிச்சீட்டு இல்லாமல் ஜூன் 2 முதல் ஜூன் 20 வரை புனித ஸ்தலங்களுக்கு நுழைய முயன்றால் 10,000 ரியால் வரை அபராதம் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு, அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் எனவும் வெளிநாட்டவர்களாயிருப்பின் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் விமானம்..!

Post Views: 143 இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி வழியாக 2024 ஆம் ஆண்டு ஹஜ் செல்பவர்கள் இறுதி தவணை பணம் செலுத்த வேண்டிய நாள் 27-04-2024 ஆகும். இந்த தேதிக்குள் முழுவதுமாக பணம் செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் விமானம் 09-05-2024 அன்று புறப்படுகிறது. சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் 26-05-2024 முதல் ஆரம்பமாகிறது. குறிப்பிட்ட தேதிகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சவுதியில் புதன்கிழமை ஈத் பெருநாள்..!

Post Views: 203 சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தால், நாளை ரமலான் 30 பூர்த்தி செய்து, (ஏப்ரல் 10] புதன்கிழமைஈதுல் பித்ர்(ஷவ்வால் பிறை ஒன்று) என அதிகாரப்பூர்வமாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஷவ்வால் (ஈதுல் பித்ரு)பிறையை பார்க்க அழைப்பு விடுத்த சவுதி அரசு..!

Post Views: 150 சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) அன்று மாலை ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பிறையைப் பார்ப்பவர்கள் தங்கள் சாட்சியத்தை அங்கு பதிவு செய்ய அல்லது அருகிலுள்ள நகர மையத்தைத் தொடர்புகொள்வதற்கு அருகிலுள்ள நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் … Read more

உலகிலேயே ஒரு நதி கூட இல்லாத நாடு எது தெரியுமா?

Post Views: 136 உலகில் நதியே இல்லாத நாடு நமக்கு அடுத்ததாக உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நாட்டில் அதிக மழை இல்லை. ஆனால் அந்த நாடு பணக்கார நாடுகளில் ஒன்றாகும். அந்த நாட்டின் பெயர் சவுதி அரேபியா. அங்கு நதியோ ஏரியோ இல்லை. சவுதி அரேபியா பெரும்பாலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆறுகள் இல்லை என்றாலும், இந்த … Read more

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டது!

Post Views: 156 வளைகுடா நாடுகளில் இன்று பிறை பார்க்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சவுதியில் ஹரமைன் பக்கத்தில் பிறை பார்க்கும் குழு பிறை தென்பட்டதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாளை சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் நோன்பு பிடிக்கப்படும்.

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா சட்டம் அமலுக்கு வந்தது..!

Post Views: 151 சவுதி அரேபியாவில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை மீறி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத நிறுவனங்களுக்கு, கேமரா ஒன்றிற்கு ஆயிரம் ரியால்கள் என்கிற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் போக்குவரத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தம்…

Post Views: 204 சவுதி அரேபியாவில் ஏப்ரல் 21 முதல் லாரிகள் மற்றும் பேருந்துகளின் போக்குவரத்து விதிமீறீர்களை கண்டறிய தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வரவுள்ளதாக போக்குவரத்து பொது ஆணையும் தெரிவித்துள்ளது. சவுதியில் பல்வேறு நகரங்களில் இந்த தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.