ஹஜ் அனுமதிச்சீட்டு இல்லாமல் ஜூன் 2 முதல் ஜூன் 20 வரை புனித ஸ்தலங்களுக்கு நுழைய முயன்றால் 10,000 ரியால் வரை அபராதம் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு, அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் எனவும் வெளிநாட்டவர்களாயிருப்பின் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.