ஓமானில் திறக்கப்பட்ட உலகிலேயே மிகவும் நீளமான Zipline..!!

Post Views: 102 ஓமான் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஓமான் சாகச மையம் (Oman Adventure Centre) புதிதாக முசந்தம் கவர்னரேட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஓமானில் உள்ள 1,800 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த இரட்டை ஜிப்லைனை் (zipline) உலகின் மிக நீளமான ஜிப்லைன் என்றும் இதில் பார்வையாளர்கள் சாகச ரைடினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓமான் டூரிசம் டெவலப்மென்ட் நிறுவனத்தால் (ஓம்ரான்) கசாப் விலாயத்தில் தொடங்கப்பட்டது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சவூதி: இனி பாஸ்போர்ட்டில் விசா ஸ்டிக்கர் இல்லை..!! இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய நடைமுறை..!!

Post Views: 91 சவுதி அரேபியாவி்ல் வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஸ்டிக்கரை அகற்றி, அதற்கு பதிலாக எலக்ட்ரானிக் விசாவை மாற்றும் ஒரு புதிய திட்டத்தை சவூதியின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் விசாவில் பயனாளிகளின் தரவுகளை QR குறியீடு மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய முயற்சியின் முதல் கட்டத்தில் ஏழு நாடுகளில் இந்த புதிய விசா நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில்  ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, … Read more

ஹஜ் செல்ல காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த பாக்கிஸ்தான் அரசு!!

Post Views: 187 இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் பலர் ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்காத காரணத்தால், நிதியை சேமிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி வழங்கி இருக்கிறது அந்நாட்டு அரசு. இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ், பொருளாதார வளம் கொண்டவர்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, சவூதி அரேபிய அரசு உலக நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்காக வரும் … Read more

விலங்குகளைப் போல இமிடேட் செய்தால் சட்ட விரோதமா? எந்த நாட்டில்? உலக நாடுகளில் இருக்கும் வினோத சட்டங்கள்!

Post Views: 79 தாய்லாந்து நாட்டில் உள்ளாடைகள் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்வது சட்ட விரோதம் ஆகும். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் சில வினோத சட்டங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். உலகில் சுமார் 195 நாடுகள் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை பின்பற்றி வருகின்றன. அரபு நாடுகளில் மிகக் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுவது அனைவரும் பரவலாக அறிந்ததே.. அதேபோல சில … Read more

உலகின் காஸ்ட்லியான மாம்பழம்.. ஒன்று 40,000 ரூபாயாம்.. இந்த விலைக்கு என்ன காரணம்! டேஸ்ட் எப்படி

Post Views: 91 டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உற்பத்தி செய்யும் மாம்பழம் ஒன்றை அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோடைக் காலம் வந்துவிட்டது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாகவே இருக்கிறது. சில காலமாகவே மழை பெய்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கணிசமாக வெயில் இருந்தே வருகிறது. அதேபோல கோடைக் காலத்திற்கான பழங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சீசனில் மாம்பழங்களின் … Read more

“ஆட்டம் காணும் பாகிஸ்தான் பொருளாதாரம்..” இம்ரான் கான் கைதால் இப்படியொரு பாதிப்பா!

Post Views: 79 இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கைதால் அங்கே சட்ட ஒழுங்கு பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நேற்று துணை ராணுவ படையினர் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் தொடர்ந்து கைதாவதைத் தவிர்த்தே வந்தார். இந்தச் சூழலில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டிற்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்கு வந்த இம்ரான் கான், அங்கே வைத்து கைது செய்யப்பட்டார் … Read more

UAE: ஆர்டர் டெலிவரி தாமதமானால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு திர்ஹமை திரும்பப் பெறலாம்!!

Post Views: 94 ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான மல்டி சர்வீஸ் செயலியான Careem அடுத்த நான்கு வாரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர், அதன் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) விட தாமதமானால், தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 திர்ஹம்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெலிவரி ரைடர்கள் அதிவேகத்தில் வாகனத்தைச் செலுத்தாமல் தங்கள் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், … Read more

ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்க தயார் நிலையில் சவூதி.. தடுப்பூசி போடுவது அவசியம்.. இதுவரை ஹஜ் செய்யாத முஸ்லிம்களுக்கு முன்னுரிமை..

Post Views: 79 சவுதி அரேபியாவிற்கு ஹஜ் எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களை ஜெத்தா, மதீனா, ரியாத், தம்மாம், தைஃப் மற்றும் யான்பு ஆகிய ஆறு விமான நிலையங்களில் வரவேற்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சவூதியின் விமான நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸ், உலகளவில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்ப, புனிதப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் பொருட்டு சவுதியா … Read more

ஒரே டிக்கெட்டில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமானத்தில் பறக்கலாம்..

Post Views: 66 வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் நாட்டைச் சுற்றிப்பார்க்க அதிக நேரத்தை வழங்கும் வகையில் போடப்பட்டுள்ள இந்த இன்டர்லைன் ஒப்பந்தத்தை இரு விமான நிறுவனங்களும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, ஒப்பந்தம் … Read more

துபாய் மெட்ரோ நிலையங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெயர்களின் விவரங்கள் இதோ..!!

Post Views: 181 துபாயில் பொதுப் போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய துபாய் மெட்ரோ,  2009ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) முக்கிய இலக்குகளில் ஒன்றாக துபாய் மெட்ரோ தொடங்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. துபாய் RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்களில் தினசரி சுமார் 1.7 மில்லியன் பேர் … Read more