Last Updated on: 11th May 2023, 02:26 pm
தாய்லாந்து நாட்டில் உள்ளாடைகள் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்வது சட்ட விரோதம் ஆகும். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் சில வினோத சட்டங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
உலகில் சுமார் 195 நாடுகள் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை பின்பற்றி வருகின்றன. அரபு நாடுகளில் மிகக் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுவது அனைவரும் பரவலாக அறிந்ததே..
அதேபோல சில மேலை நாடுகளில் வினோத சட்டங்கள் பலவும் உள்ளன. அவற்றை மீறினால் அபராதம் முதல் சிறை தண்டனை வரை விதிக்கப்படும். அப்படியான சில வினோத சட்டங்களையும் அது எந்த நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது என்ற விவரத்தையும் இங்கே பார்க்கலாம்.
சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். பணக்கார நாடான சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக பின்பற்றப்படுவது அனைவரும் அறிந்த விஷயம் தான். சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்வது சட்ட விரோதம் ஆகும். எனவே சிங்கப்பூர் சென்றால் தப்பித்தவறி பழக்க தோஷத்தில் சுவிங்கத்தை மென்று விடாதீர்கள்…
ஜெர்மனி என்றாலே பலருக்கும் கார்கள் நினைவுக்கு வரக்கூடும். காரணம் அங்குள்ள கார் நிறுவனங்கள் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்தவை. ஜெர்மனியில் சாலைககளில் சென்றுகொண்டு இருக்கும் போது வாகனங்கள் எரிபொருள் இன்றி நின்று… வாகனத்தை இழுத்து செல்ல வேண்டிய நிலை வந்தால் அந்த நாட்டில் சட்ட விரோதமாக கருதப்படும்.
பிஜி நாட்டில் மேலாடையின்றி சன் பாத்திங் (சூரிய குளியல்) போடுவது சட்ட விரோதம் ஆகும்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விலங்குகளை போன்று இமிடேட் செய்து காட்டுவது சட்ட விரோதம் ஆகும்.
ஜப்பானில் பாதசாரிகள் மீது தண்ணீர் படும் படி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். இந்த விவகாரம் மிகவும் தீவிர பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படும். நம்ம ஊரைபோல இஷ்டத்திற்கு மழைக்காலங்களில் வாகனங்களை அங்கு ஓட்டிச்செல்ல முடியாதுதான் போல…
நம்ம ஊரில் துணிக்கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் கவர்ச்சியான பொம்மைகளை 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பார்ப்பதற்கு சட்டப்படி இங்கிலாந்தில் அனுமதி கிடையாது.
ரஷ்யாவில் அழுக்காக கறை படிந்தபடி கார்களை ஓட்டுவது போக்குவரத்து விதி மீறல் ஆகும். இது போன்ற வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்களை கழுவக்கூடாது. விடுமுறை தினம் தானே என நம்ம ஊர் நினைப்பில் அங்கே போய் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்களை கழுவி சுத்தம் செய்தால் வம்புதான்..
தாய்லாந்து நாட்டில் உள்ளாடைகள் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே தாய்லாந்து போகும் முன் அவசியம் தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
*இத்தாலியில் குண்டாக இருப்பவர்கள் பாலிஸ்டர் துணிகளை அணியக்கூடாது. பல்கேரியா நாட்டில் தீ அணைப்பு கருவி இன்றி கார்களை வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது.