Last Updated on: 9th May 2023, 07:46 pm
துபாயில் பொதுப் போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய துபாய் மெட்ரோ, 2009ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) முக்கிய இலக்குகளில் ஒன்றாக துபாய் மெட்ரோ தொடங்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
துபாய் RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்களில் தினசரி சுமார் 1.7 மில்லியன் பேர் மெட்ரோவில் பயணம் செய்கின்றனர், மேலும் துபாய் மெட்ரோவானது உலகின் பாதுகாப்பான, தூய்மையான பொதுப் போக்குவரத்தில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
குறிப்பாக, ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் என்ற இரண்டு வழித்தடங்களில் இயங்கும் துபாய் மெட்ரோவில் மொத்தம் 47 நிலையங்கள் உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த நிலையங்களின் பெயர்கள் அடிக்கடி மாற்றங்களைக் கண்டுள்ளன, இது புதிய மெட்ரோ பயனர்கள் அல்லது குறுகிய அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெட்ரோவைப் பயன்படுத்துபவர்களுக்கு சில குழப்பங்களை ஏற்படுத்துவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ஆகவே, துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களின் தற்போதைய பெயர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெயர்களின் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;
1. சென்டர்பாய்ன்ட் (Centrepoint): ரெட் லைன் வழித்தடத்தில் இருந்த அல் ரஷிதியா மெட்ரோ நிலையத்தின் தற்போதைய பெயர் சென்டர்பாய்ன்ட்
2. மேக்ஸ் (Max): ரெட் லைனில் இருந்த அல் ஜாஃபிலியா மெட்ரோ நிலையத்தின் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட பெயர் மேக்ஸ்.
3. சோபா ரியாலிட்டி (Sobha Reality): ரெட் லைனில் இருந்த துபாய் மெரினா/ DAMAC ப்ராப்பர்ட்டிஸ் ஆக இருந்த மெட்ரோ நிலையத்தின் தற்போதைய பெயர் சோபா ரியாலிட்டி என்று மாற்றப்பட்டுள்ளது.
4. ஆன்பேஸிவ் (Onpassive): ரெட் லைன் மெட்ரோ தடத்தில் இருந்த நூர் இஸ்லாமிக் பேங்க் / நூர் பேங்க் /அல் சஃபா என அழைக்கப்பட்டு வந்த மெட்ரோ நிலையத்திற்கு தற்போது Onpassive என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5. ADCB: ரெட் லைன் வழித்தடத்தில் இருந்த அல் கராமா மெட்ரோ நிலையம் தற்போது ADCB என்ற பெயரில் செயல்படுகிறது.
6. ஈக்விட்டி (Equity): ரெட் லைன் தடத்தில் இருந்த ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க் / ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க் / உம் அல் ஷீஃப் என அழைக்கப்பட்டு வந்த மெட்ரோ நிலையம் தற்போது ஈக்விட்டி என்ற பெயரில் செயல்படுகிறது.
7. அல் கைல் (Al Khail): ரெட் லைன் பகுதியில் துபாய் மெரினா பகுதியில் இருந்த நக்கீல் மெட்ரோ நிலையம் தற்போது அல் கைல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8. மஷ்ரிக் (Mashreq): ரெட் லைன் வழித்தடத்தில் உள்ள அல் ஃபாஹிதி / ஷரஃப் DG என அழைக்கப்பட்ட மெட்ரோ நிலையம் இப்போது மஷ்ரிக் என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
9. DMCC: ரெட் லைன் மெட்ரோ தடத்தில் ஜுமைரா லேக் டவர்ஸ் (JLT) என அழைக்கப்பட்டு வந்த மெட்ரோ நிலையம் தற்போது DMCC மெட்ரோ நிலையமாக செயல்படுகிறது.
10. ஜெபல் அலி (Jebal Ali): ரெட் லைன் தடத்தில் நக்கீல் ஹார்பர் அன்ட் டவர் என பெயரிடப்பட்டிருந்த மெட்ரோ நிலையம் இப்போது ஜெபல் அலி என்ற பெயரில் செயல்படுகிறது.
மேற்கூறியவாறு அனைத்து மெட்ரோ நிலையங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதால் உங்கள் பயணங்களை சிரமமின்றி சுமூகமானதாக உறுதிப்படுத்த RTA வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலுடன் உங்கள் பயணத்தைத் தொடர்வது சிறந்ததாகும்.