அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

Post Views: 343 அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 … Read more

ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை: கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு..!

Post Views: 176 ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரது பிரசாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகுவதால் விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ … Read more

அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

Post Views: 143 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை … Read more

‘அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்’: டொனால்ட் டிரம்ப் பேச்சு 

Post Views: 195 வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.செனட் வேட்பாளர் பெர்னி மோரேனோவுக்காக ஓஹாயோ மாநிலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் இந்த வார்த்தைகளை கூறினார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் போட்டியிட உள்ளனர்.சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி…

Post Views: 251 அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு … Read more

அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..

Post Views: 123 அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், கேபிடல் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ், கூட்டாட்சி பதவிக்கான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து மாநிலங்களைத் தடுத்துள்ளது.அதோடு, கொலராடோவின் வாக்குப்பதிவில் இருந்து அவரை விலக்கிய கீழ் நீதிமன்றத்தின் முடிவையும் தற்போது உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின்படி, மீண்டும் பொதுப் பதவியை வகிக்க டிரம்ப் தகுதியற்றவர் என்றும், மாநிலத்தின் குடியரசுக் கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் இருந்து … Read more

அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி..!

Post Views: 343 நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.தொடர்ந்து வெற்றி பெற்று வந்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நிக்கி ஹேலியின் முதல் வெற்றி இதுவாகும்.குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எஞ்சி இருக்கு ஒரே போட்டியாளராக நிக்கி ஹேலி உள்ளார்.இந்நிலையில், நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி 62.9% வாக்குகளை வென்றார். முன்னாள் … Read more

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

Post Views: 205 கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு

Post Views: 201 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் ஒருமுகமாக தேர்வாவதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.அதோடு, குடியரசு கட்சியில் இருந்து தேர்தலுக்கு நிற்கும் மற்றொரு வேட்பாளரரான நிக்கி ஹேலியை அவர் தோற்கடித்துள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.பல கோர்ட், கேஸ்களை சந்தித்து வந்தாலும், டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே குடியரசுக் கட்சி வாக்கெடுப்பில் முன்னிலையில் உள்ளார் என்பது … Read more