Last Updated on: 4th March 2024, 07:35 pm
நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.தொடர்ந்து வெற்றி பெற்று வந்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நிக்கி ஹேலியின் முதல் வெற்றி இதுவாகும்.குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எஞ்சி இருக்கு ஒரே போட்டியாளராக நிக்கி ஹேலி உள்ளார்.இந்நிலையில், நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி 62.9% வாக்குகளை வென்றார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 33.2% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
அமெரிக்கா அடுத்து வரும் போட்டிகளில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவாரா?
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில், அதிபர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட போகும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வு தற்போது நடந்து வருகிறது.இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு வேட்பாளர் தேர்வு போட்டிகளில் டிரம்ப் கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்து வரும் அனைத்து நியமனப் போட்டிகளிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.வாஷிங்டன் DC 100% நகர்ப்புறமான பகுதியாகும். ஒப்பீட்டளவில் அங்குள்ள அதிகமான குடியிருப்பாளர்கள் கல்லூரி பட்டம் பெற்றவர்கள் ஆவர்.