தாய்லாந்து: கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்; 25 மாணவர்கள் பலி என அச்சம்..!

Post Views: 55 பாங்காக்,தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே உத்தை தனி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 44 பேர் இருந்துள்ளனர். கல்வி சுற்றுலாவுக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் என்னவென தெரியவில்லை. இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் … Read more

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் பரிதாப பலி; 18 பேர் மாயம்..!

Post Views: 46   இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி … Read more

நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

Post Views: 116 நைஜீரியாவில் 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை மற்றும் இறுதிச்சடங்கு ஒன்றில் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் கொல்லப்பட்டனர்.பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தீவிரமாகும் காசா போர்.. 38 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்.. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலி..!

Post Views: 216 பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர … Read more

பாகிஸ்தானில் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது..!

Post Views: 152 இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு … Read more

நேபாளத்தில் மழை, வெள்ளம்; 14 பேர் பலி..!

Post Views: 273 நேபாளத்தில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கடந்த 17 நாட்களில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். காஸ்கி, நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் தாக்கியதில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால், … Read more

ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம்:லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

Post Views: 49 ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் இறுதி ஊர்வலம் புதன்கிழமை தெஹ்ரானில் நடைபெற்றது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் வாகனத்தை மக்கள் திரள் சூழ்ந்தது. இவர்களின் இறுதி அஞ்சலி ஈரானின் மேல்மட்ட தலைவரான அயதுல்லா அலி கமேனி முன்பாக நடத்தப்பட்டது.தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுதலை சதுக்கம் வரை ஊர்வலம் சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு ஈரானில் ரய்சி மற்றும் வெளியுறவுத் … Read more

வங்காளதேசத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 14 பேர் உயிரிழப்பு

Post Views: 52 வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

அமெரிக்கா | காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு – 2024ல் 11-வது சம்பவம் இது!

Post Views: 153 ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.25 வயதான அர்பத்தின் உடல் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் மீட்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் அவரது மரணத்தை உறுதி செய்துள்ளது.நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில், “முகமது அப்துல் அர்பத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் … Read more

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஐந்து பேர் பலி.!பலர் காயம்..!

Post Views: 1,129 ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த வியாழன் இரவு 9.30 மணியளவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 17 பேருக்கு மிதமான காயங்களும் 27 பேர் சிறிய காயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக … Read more