8.2 C
Munich
Friday, October 4, 2024

நேபாளத்தில் மழை, வெள்ளம்; 14 பேர் பலி..!

நேபாளத்தில் மழை, வெள்ளம்; 14 பேர் பலி..!

Last Updated on: 27th June 2024, 12:55 pm

நேபாளத்தில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கடந்த 17 நாட்களில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காஸ்கி,

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் தாக்கியதில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால், பொதுமக்களின் வாழ்க்கை, சொத்துகள், உட்கட்டமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகின்றன.இதுபற்றி உள்விவகார துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நிலச்சரிவில் சிக்கி 8 பேரும், மின்னல் தாக்கியதில் 5 பேரும் மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.

2 பேரை பற்றிய தகவல் தெரிய வரவில்லை. 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளது. கடந்த 17 நாட்களில் (ஜூன் 26 வரை) மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.நேபாளத்தில், 18 லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்பட கூடும் என்று அரசு மதிப்பீடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here