ஒலிம்பிக் திருவிழா இன்று பாரீஸில் துவக்கம்..!

Post Views: 38 பாரீஸ்: உலக நாடுகள் பங்கு கொள்ளும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் திருவிழா இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக துவங்குகிறது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி இன்று (ஐூலை 26) தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை வீரர்கள் … Read more

அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்..!

Post Views: 67 ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.இண்டினோலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.”பலர் வெளியே நின்று கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்” என்று இந்தியனோலா காவல்துறைத் தலைவர் ரொனால்ட் சாம்ப்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.துப்பாக்கி சூடு … Read more

ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை: கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு..!

Post Views: 57 ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரது பிரசாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகுவதால் விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ … Read more

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு..!

Post Views: 41 தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமானது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள் … Read more

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

Post Views: 79 உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. … Read more

ஒரே வார்த்தை தான்… திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து! – அதிரவைத்த தம்பதி!

Post Views: 49 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னாலும், சிலருக்கு அது சொர்க்கமாகவும், சிலருக்கு அது நரகமாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கிச் செல்கின்றனர். ஆனால், குவைத்தில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.அங்குள்ள வழக்கப்படி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி முன்னிலையில் திருமணத்தை முடித்துக் கொண்ட தம்பதி, அங்கிருந்து வெளியேறினர். அப்போது, … Read more

நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி, ஒரு விமானி காயங்களுடன் மீட்பு

Post Views: 79 காத்மாண்டு: நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் … Read more

அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

Post Views: 55 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை … Read more

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: 229 பேர் உயிரிழந்த பரிதாபம்!

Post Views: 68 எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் கடந்த ஜூலை 21ம் தேதி அதிகனமழை பெய்தது. இதனால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிக்கினர். மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் விலகல்!

Post Views: 75 எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக … Read more