அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி..!

Post Views: 268 நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.தொடர்ந்து வெற்றி பெற்று வந்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நிக்கி ஹேலியின் முதல் வெற்றி இதுவாகும்.குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எஞ்சி இருக்கு ஒரே போட்டியாளராக நிக்கி ஹேலி உள்ளார்.இந்நிலையில், நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி 62.9% வாக்குகளை வென்றார். முன்னாள் … Read more

“நெருங்கும் ரமலான்… காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” – ஜோ பைடன் புதிய தகவல்

Post Views: 192 ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரும், … Read more

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 

Post Views: 147 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் … Read more

வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி 

Post Views: 179 அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிடையே செயல்பட்டு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் சண்டையை நிறுத்தவும் முயன்று வருகின்றனர்.இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அத்தகைய ஒப்பந்தம் எப்போது … Read more

அமெரிக்காவில் G-Pay-க்கு குட் பை!

Post Views: 155 அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் Google Pay செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு! எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயலியை விட வாலட் பயன்பாடு அதிகம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை…

Post Views: 199 நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ எனப்படும் ஒரு புதிய வைரஸ் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனைகளில் கடந்த … Read more

உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு…

Post Views: 103 உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக அமேசான் மழைக்காடுகள் உள்ளன. அங்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பல்வேறு புதிய தகவல்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு அமேசான் காட்டில் உள்ள நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமேசான் ஆற்றங்கரையில் தனியார் தொலைக்காட்சியின் ஆவண படப்பிடிப்பின் போது வனவிலங்கு தொகுப்பாளரான பேராசிரியர் ஃபிரீக் வோங்க் (freek vonk) உலகின் நீளமான அனகோண்டாவை கண்டுப்பிடித்தார். … Read more

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்…

Post Views: 284 அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, … Read more

உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி.. தனது 116வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்!

Post Views: 92 கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மரங்கள் முறிந்து, நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடியிருந்த நிலையிலும் கூட அவரது 116-வது பிறந்தநாளை நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்!

Post Views: 261 அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்நிலையில், இந்திய அரசு தலையிட்டு அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹைதராபாத்தை சேர்ந்த சையது மசாஹிர் அலி, சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.பிப்ரவரி 4 அன்று, அவரது வெஸ்ட் ரிட்ஜ் குடியிருப்பின் அருகே ஆயுதமேந்திய கொள்ளையர்களால் அவர் … Read more