Last Updated on: 24th February 2024, 07:04 pm
நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ எனப்படும் ஒரு புதிய வைரஸ் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனைகளில் கடந்த மூன்று வாரங்களில் 13.9 சதவீதத்தினருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.