சவுதி அரேபியாவில் தொழில் நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்..!இந்தியாவிலும் இந்த வாய்ப்பு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.

Post Views: 33 சவுதி அரேபியாவில் 50க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள், சவுதி அரேபிய மாணவர்கள் தொழிலாளர் சந்தையில் தகுதி பெறும் வகையில் கண்டிப்பாக தொழில் பயிற்சி வழங்க வேண்டும் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்தேர்ச்சி பெறும் வகையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களின் தரம் மற்றும் செயல் திறனை உயர்த்த வேண்டும் எனவும், பயிற்சி காலம் முடிந்ததும் போதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் எனவும் … Read more

வீட்டு வாடகை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழி மட்டுமே!

Post Views: 94 சவுதி அரேபியாவில், ஜனவரி 15 முதல் வீட்டு வாடகை செலுத்துவது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே செல்லுபடியாகும் என ஈஜார் தெரிவித்துள்ளது. அல்லது ஈஜார் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தப்படும் எந்த தொகையும் வாடகை செலுத்தியதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது எனவும் ஈஜார் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் வழியாக வாடகை ஒப்பந்தத்தை பயனாளர் ஆவணப்படுத்த வேண்டும் எனவும், பின்னர் வாடகை செலுத்துவது ஆன்லைன் வழியாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் … Read more

ஜம் ஜம் தண்ணீர் விலை உயர்வு…!

Post Views: 46 மக்காவில் உள்ள ஜம்ஜம் தொழிற்சாலையில் 5 லிட்டர் கேனின் விலை 9.75 SAR (வாட் உட்பட) விற்கப்படுகிறது. முன்பு 5.50 SAR என்பது குறிப்பிடத்தக்கது. ஜித்தா விமான நிலையத்தில் 12.50 SAR ரியாத்தில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டிலும் 9.75 SAR விற்கப்படுகிறது.

மக்கா பகுதியில் புதிய தங்க வளம் கண்டுபிடிப்பு

Post Views: 40 சவுதிஅரேபியாவின் மக்கா பிராந்தியத்தில் மன்சூரா மசாரா தங்க சுரங்கத்தின் தெற்கே 100 கி.மீ தூரத்தில் புதிய பெரிய தங்க வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதின் நிறுவனம் அறிவித்துள்ளது. மாதின் என்பது சவுதி அரேபியாவின் சுரங்க வளங்களை கண்டுபிடிப்பதற்காக சவுதி பொது முதலீட்டு நிதியுடன் இணைந்து செயல்படம் நிறுவனமாகும். மன்சூரா மசாரா என்பது சவுதி அரேபியாவில் உள்ள புதிய, மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தங்கச் சுரங்கம் ஆகும். இது 2022 இல் 11,982.84 … Read more

சவுதி அரேபியாவில் இரண்டரை லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள்..!

Post Views: 185 2030 ஆம் ஆண்டின் உலகக் கண்காட்சியை சவுதி அரேபியா நடத்த இருப்பதால் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் தயாராகி வருகின்றது. இந்நிலையில், சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் புதியதாக இரண்டரை லட்சம் வேலை வாய்ப்புக்கள் தயாராகும் என சுற்றுலா அமைச்சர் அகமது அல் கதீஃப் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டிற்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளில் சுமார் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி, உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு … Read more

உம்ரா செய்வதற்கான சிறந்த நேரம்…ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!

Post Views: 96 சவுதி அரேபியாவில் உள்ளூர் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உம்ரா செய்வதற்காக வரும் யாத்திரிகளுக்கு உம்ரா செய்வதற்கான சிறந்த நேரம் காலை 7:30 மணி முதல் 10:30 வரையிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

சீன கார்களை பயன்படுத்துவதில் சவுதி முதலிடம்..!

Post Views: 86 வளைகுடா நாடுகளின் பயன்பாட்டில் சீனாவின் தயாரிப்பு கார்களை வாங்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 66,000 த்திற்கும் அதிகமான கார்கள் சவுதி அரேபியாவில் வாங்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் மொத்த விற்பனையில் இது 52 சதவிகிதமாகும். சவுதியின் கிழக்கு மாகாணத்தில் தான் அதிக அளவில் சீனக் கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் வர்த்தக அறிக்கை தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவில் விமான நிலையங்களில் மின்சார கார் சார்ஜிங்..

Post Views: 34 சவுதி அரேபியாவில் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் உள்ள 22 விமான நிலையங்களிலும் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தங்களை ஏர்போர்ட் கிளஸ்டர் நிறுவனமும், கிரீன் சொல்யூசன் நிறுவனமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளது. காற்றில் கார்பன் மாசுபாட்டை குறைக்கவும், மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் வேண்டி முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

விமான பயணிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் நடைமுறை

Post Views: 72 சவுதிஅரேபியாவில் விமான பயணிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் நேற்று (20-11-2023) முதல் அமுலுக்கு வந்ததாக CAGA தெரிவித்துள்ளது. விமானம் முன்னதாக புறப்பட்டாலோ, அதிக தாமதம் ஏற்பட்டாலோ, அதிக முன்பதிவு, ரத்து செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்கு டிக்கெட் மதிப்பில் 150 முதல் 200 சதவிகிதம் வரை இழப்பீடு கிடைக்கும். பயணிகளின் லக்கேஜ் தொலைவது, சேதமடைவது, தாமதமாகி கிடைப்பது உள்ளிட்டவைகளுக்கு 6568 ரியால்கள் வரை அபராதம் கிடைக்கும். முன்பதிவின் போது குறிப்பிடப்படாத இடங்களில் விமான நிறுத்தம் … Read more

சவுதி அரேபியாவில் Experience Certificate – வாங்குவது இனி எளிது..!

Post Views: 37 சவுதி அரேபியாவில் தனியார் துறையில் பணிபுரியும் நபர்கள், அவர்கள் பணி செய்த காலத்திற்கான அனுபவச் சான்றிதழை (Experience Certificate) பெற்றுக் கொள்வதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எளிதாக்கியுள்ளது. இனி முதல், அனுபவச்சான்றிதழ்களை தனிநபர் கிவா போர்ட்டலில் சர்வீஸ் சர்ட்டிபிகேட் என்பதை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இந்த சான்றிதழ்களை புதிய நிறுவனங்களுக்கு சமர்பித்து பணி மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version