மக்கா பகுதியில் புதிய தங்க வளம் கண்டுபிடிப்பு

சவுதிஅரேபியாவின் மக்கா பிராந்தியத்தில் மன்சூரா மசாரா தங்க சுரங்கத்தின் தெற்கே 100 கி.மீ தூரத்தில் புதிய பெரிய தங்க வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதின் நிறுவனம் அறிவித்துள்ளது. மாதின் என்பது சவுதி அரேபியாவின் சுரங்க வளங்களை கண்டுபிடிப்பதற்காக சவுதி பொது முதலீட்டு நிதியுடன் இணைந்து செயல்படம் நிறுவனமாகும்.

மன்சூரா மசாரா என்பது சவுதி அரேபியாவில் உள்ள புதிய, மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தங்கச் சுரங்கம் ஆகும். இது 2022 இல் 11,982.84 அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

4 thoughts on “மக்கா பகுதியில் புதிய தங்க வளம் கண்டுபிடிப்பு”

Leave a Comment

Exit mobile version