சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டது!

Post Views: 51 வளைகுடா நாடுகளில் இன்று பிறை பார்க்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சவுதியில் ஹரமைன் பக்கத்தில் பிறை பார்க்கும் குழு பிறை தென்பட்டதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாளை சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் நோன்பு பிடிக்கப்படும்.

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா சட்டம் அமலுக்கு வந்தது..!

Post Views: 61 சவுதி அரேபியாவில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை மீறி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத நிறுவனங்களுக்கு, கேமரா ஒன்றிற்கு ஆயிரம் ரியால்கள் என்கிற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது சவுதிஅரேபியா…

Post Views: 630 சவுதிஅரேபியா 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவிகிதமாக உயரும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த காலகட்டத்தில் சவுதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் போக்குவரத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தம்…

Post Views: 67 சவுதி அரேபியாவில் ஏப்ரல் 21 முதல் லாரிகள் மற்றும் பேருந்துகளின் போக்குவரத்து விதிமீறீர்களை கண்டறிய தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வரவுள்ளதாக போக்குவரத்து பொது ஆணையும் தெரிவித்துள்ளது. சவுதியில் பல்வேறு நகரங்களில் இந்த தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை..

Post Views: 67 சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.ஆனால் இந்த சேவை முஸ்லீம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.பின்னர், வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதிக் குறியீட்டைப் பெற வேண்டும்.மேலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாதாந்திர ஒதுக்கீட்டிற்குள் தான் வாங்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.இஸ்லாம் மதத்தில், மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அரேபிய நாடுகளில் மதுக்கடைகள் கிடையாது.தற்போது இந்த … Read more

வேலை விசாவிற்கான விரல் அடையாளம் – தேதி நீட்டிப்பு..

Post Views: 45 சவுதிஅரேபியாவிற்கான வேலை விசாவிற்கு விரல் அடையாளம் பதிவு செய்வதற்கான நாள் ஜனவரி 31 முதல் துவங்கப்படும் என டெல்லியிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இது குறித்து எந்த அறிவிப்பும் மும்பையில் உள்ள சவுதி தூதரகத்தில் இருந்து வெளியிடப்படவில்லை. முதலில் ஜனவரி 15 முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அதனை ஜனவரி 26 வரை என நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷா ஏர் சேவை சவுதியில் மார்ச் முதல் துவக்கம்..

Post Views: 81 இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர், மார்ச் மாத இறுதியில் தனது சேவையை ஜித்தா, தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு விரிவாக்குகிறது. இதற்குண்டான ஆணை கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பட்ஜெட் ஏர்லைன்ஸ் துவங்கினால், விமான கட்டணத்தில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷா ஏர் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

ஜித்தாவில் இருந்து மக்காவிற்கு பேருந்து..!

Post Views: 40 ஜித்தா விமான நிலையத்தில் இருந்து மக்காவிற்கு உம்றா பயணிகளுக்காக பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. காலை 1.45க்கு துவங்கும் இந்த போக்குவரத்து இரவு 11.45 வரை நீடிக்கும். தினசரி 16 சேவைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிருக்கு வைத்த நெருப்பில் சிக்கி 2 தமிழர்கள் மரணம்…

Post Views: 32 சவுதிஅரேபியாவில் தம்மாம் பகுதியில் வீட்டு டிரைவர்களாக பணியாற்றி வந்த இரண்டு தமிழர்கள், அறையில் குளிருக்காக நெருப்பு பற்ற வைத்ததில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். புகைக்காக நெருப்பு பற்ற வைத்து உறங்கிய போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தெரிவிக்கிறது. கள்ளக்குறிச்சியைச் சார்ந்த முஸ்தஃபா முஹம்மதலி மற்றும் வாளமங்களத்தைச் சார்ந்த தாஜ் முஹம்மது மீரான் மைதீன் ஆகியோரும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது உடல் தம்மாமில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சவுதி அரேபியா இடையே ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது..!

Post Views: 40 இந்திய சிறுபான்மையினர் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல் ரபியா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். ஜித்தா வந்த சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான குழு, சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல் ரபியாவை சந்தித்தது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் … Read more

Exit mobile version