2030 ஆம் ஆண்டின் உலகக் கண்காட்சியை சவுதி அரேபியா நடத்த இருப்பதால் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் தயாராகி வருகின்றது. இந்நிலையில், சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் புதியதாக இரண்டரை லட்சம் வேலை வாய்ப்புக்கள் தயாராகும் என சுற்றுலா அமைச்சர் அகமது அல் கதீஃப் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டிற்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளில் சுமார் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி, உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களும் துவங்கப்பட்டு வருகின்றன.