நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

Post Views: 118 நைஜீரியாவில் 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை மற்றும் இறுதிச்சடங்கு ஒன்றில் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் கொல்லப்பட்டனர்.பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

Post Views: 98 கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் … Read more